Vijay Kerala: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ‘The Greatest of all time’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது.
அதற்காக சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். அங்கு விஜய்யை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக விஜய்யைக்கான வந்த ரசிகர்களை தனது வழக்கமான பாணியில் வேனின் மீது ஏறி தனது ரசிகர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தனது ரசிகர்களிடம் பேசினார். மேலும், இதுவரை காணாத அளவிற்கு விஜய்யின் ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். மேலும், விஜய்யை காண தமிழ்நாட்டில் இருந்தும் ரசிகர்கள் கேரளா சென்றுள்ளனர்.
அந்த வகையில், இன்று கூடிய கூட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், ‘இது தளபதியின் மாநாடு’ என கூறி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை சிம்பிள் லுக்கில் இருந்த நடிகர் விஜய், இப்போது மாஸ் லுக்கில் காணப்பட்டார்.
படப்பிடிப்பு முடிந்த உடனே அதே லுக் மற்றும் அதே உடையுடன் தனது ரசிகர்களைக் காண ஓடி வந்திருக்கிறார். தொடர்ந்து, தனது ரசிகர்களுன் சேர்ந்து வழக்கமான பாணியில் செல்பி எடுத்துக்கொண்டார்.
அந்த வீடியோ விஜய் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டு அனைவருக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது கேரளாவில் படப்பிடிப்பை முடித்த விஜய் அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.
அதற்காக கேரள விமான நிலையத்தில் விஜய் நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், கேரள ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். மேலும், மீண்டும் கேரளா வரும்படி விஜய்க்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.