‘ஆக்சனுக்கு தயாராகுங்கள்’ – வெளியானது ‘The Greatest of all Time’ செகண்ட் லுக்..!

0
67

‘The Greatest of all Time’: ‘தளபதி 68’ படத்திற்கு ‘The Greatest of all Time’ என டைட்டில் வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இன்று இப்படத்தின செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீப காலமாக ‘தளபதி 68’ படத்திற்கு பல்வேறு டைட்டில்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் நேற்று (டிச.31) படத்திற்கு ‘The Greatest of all Time’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், இன்று படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டரை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ‘X’ தளபத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘ஆக்சனுக்குத் தயாராகுங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது ‘X’ தளபத்தில் பதிவிட்டுள்ளார். ‘The Greatest of all Time’ படத்தின் இரண்டு போஸ்டர்களும் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஓடிடியில் ரிலீஸாகும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’..! எப்போ தெரியுமா..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here