‘The G.O.A.T.’ பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.. ‘விசில் போடு’.. வெளியானது புதிய போஸ்டர்..!

0
125

‘The Greatest of all Time’: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்டார். அதன்படி, ‘The Greatest of all Time’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தற்போது படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிளின் பெயர் ‘விசில் போடு’ என குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here