‘The G.O.A.T.’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்..!

0
103

‘The Greatest of all Time’: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘The Greatest of all Time’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் உள்ள விஜய்யின் கெட்டப் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here