இணையத்தில் லீக்கான GOAT பட காட்சி..! செம்ம டென்ஷனில் படக்குழு..!

0
94

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஷூட்டிங் வீடியோ லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இது தொடர்பான ஒரு வீடியோவும் வெளியாகி படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையின் நடுவே விஜய் மற்றும் இரண்டு நடிகர்களுக்குள் ஏற்படும் பிரச்சினையை படமாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனையறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த காட்சி ‘The Greatest of all Time’ படத்தின் படப்பிடிப்பா அல்லது வேறு படத்தின் காட்சியா என்பது குறித்தும் விவாதம் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here