‘The Greatest of all Time’: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தளபதியின் 68ஆவது படமான ‘The Greatest of all Time’ படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை கோவளத்தில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. கோவலத்தில் உள்ள இரண்டு வீடுகளில் மாறி மாறி படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், அங்குள்ள சாலைகளிலும் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 23ஆம் தேதி வரை கோவளத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், அதன் பிறகு ஒருவாரம் ஓய்வுக்குப் பின் ராஜஸ்தான் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் இலங்யில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகம், கடைசியாக இஸ்தான்புல்லில் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ‘The Greatest of all Time’ படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ‘I am the Devil’ – அதிரடி காட்டும் ‘கேப்டன் மில்லர்’ டிரைலர்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here