‘The G.O.A.T’ – பர்ஸ்ட் சிங்கிளில் விஜய்யுடன் சேர்ந்து பாடிய பிரபல இயக்குநர்..!

0
109

The Greatest of All Time: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘The Greatest of all Time’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலில் விஜய் பாடியுள்ளார், அவருடன் சேர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவும் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here