‘நாளை சம்பவம் உறுதி’.. ‘The G.O.A.T.’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்..

0
73

‘The Greatest of all Time’: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்டார். அதன்படி, ‘The Greatest of all Time’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை ‘The Greatest of all Time’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here