‘The Greatest of all Time’ அப்டேட்..! விஜய்க்கு தங்கையாகும் ஒளிப்பதிவாளர் மகள்..!

0
70

‘The Greatest of all Time’: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிலையில் தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்தில் புதிய கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரம் ஒன்று இருப்பதாகவும், அதில் ‘லவ் டுடே’ இவானா நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால், அவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.

இவானா கதாபாத்திரமானது 15 வயதுடைய பள்ளி மாணவி எனவும் அந்த கதாபாத்திரத்திற்கு இவானா செட் ஆகாததால் அவரை படத்தில் இருந்து நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டன் மகள் அப்யுக்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here