சாய் தன்ஷிகா நடிக்கும் ‘தி ப்ரூப்’.. டிரைலரை வெளியிடும் சசிகுமார்..!

0
130

The Proof: தமிழ் சினிமாவில், ‘மாஞ்சா வேலு’, ‘பேராண்மை’, ‘இருட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. இவர் தற்போது, நடன இயக்குநர் ராதிகா இயக்கத்தில் ‘தி ப்ரூப்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் ரித்விகா, அசோக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் சாய் தன்ஷிகா ஆக்ரோஷமாக இருப்பதுபோன்று இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது படம் குறித்து புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தி ப்ரூப்’ படத்தின் டிரைலரை படக்குழு நாளை வெளியிடவுள்ளது. மேலும், இந்த டிரைலரை இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது ‘X’ தளத்தில் வெளியிடவுள்ளார்.

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. ‘தி ப்ரூப்’ படம் கட்டாயம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here