‘தி கோட் லைஃப்’ படத்திற்கு வந்த சோதனை – போலீசில் புகார் அளித்த இயக்குநர்..!

0
99

‘The Goat Life’: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். இவர் தற்போது 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஆடு ஜீவிதம்’ எனும் மலையாள நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள ‘தி கோட் லைஃப்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கியுள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், சுனில் கே.எஸ்.ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘தி கோட்ஸ் லைஃப்’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் ‘நஜீப்’ எனும் கதாப்பாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார்.

இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 28ஆம் தேதி வெளியானது. படம் வெளியான மூன்று நாட்களில் மட்டும் ‘தி கோட்ஸ் லைஃப்’ படம் உலக அளவில் ரூ.21.60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், ‘தி கோட்ஸ் லைஃப்’ படம் இணையத்தில் கசிந்துள்ளதாக இயக்குநர் பிளஸ்சி, எர்ணாகுளம் சைபர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “எங்களது படம் கடந்த 28ஆம் தேதி ரிலீஸான நிலையில் படத்தின் நகல் இணையத்தில் கசிந்துள்ளது.

இது படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். படம் ரிலீஸான சில மணி நேரத்திலேயே கனடாவில் படத்தின் நகலும் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here