இந்திய நாட்டின் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு எமர்ஜென்சி என்ற படம் உருவாக்கப்பட்ட வருகிறது.
இந்த படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தை அவரே இயக்குகிறார். கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நிறைவு செய்த நிலையில் இந்த படம் நவ. 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோனது. இந்த நிலையில் ‘எமர்ஜென்சி’ படம் ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த படம் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இந்திரா காந்தியை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக ஏற்கனவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும், இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நேரத்தில் தங்களது எதிர்ப்பை தீவிரப்படுத்த காங்கிரஸினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ‘எமர்ஜென்சி’ படம் ரிலீஸ் ஆகுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.