Sivakarthikeyan: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
‘அயலான்’ படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில், கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
இந்த படத்தை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கின்றன.
தொடர்ந்து, படத்தின் பணிகள் மீது படக்குழு வேகம் காட்டி வருவதால், ‘அமரன்’ வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘SK 23’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் என்ற கன்னட நடிகை நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். அதன் காரணமாக ‘SK 23’ படத்தின் பணிகள் விரைவில் முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘அயலான்’ படத்தை தொடர்ந்து ‘அமரன்’ மற்றும் ‘SK 23’ ஆகிய படங்களும் இந்த 2024ஆம் ஆண்டு வெளியாகவுள்ளதாக ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.