விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்..! இந்தாண்டு விஜய்யின் 3 படங்கள் ரிலீஸ்..!

0
85

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படம் தளபதி பிறந்தநாளன்று திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது. இருந்தபோதிலும், மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாகவும், விஜய் அரசியலில் இறங்கப்போவதால் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் தன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாக முடிவெடுத்துள்ளாராம். அதன்படி விஜய் ஏப்ரல் மாதம் தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்துவிட்டு இந்தாண்டு தீபாவளி பண்டிகையை படத்தை வெளியிட விஜய் முடிவெடுத்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த ‘கில்லி’ திரைப்படம் இந்தாண்டு ரீரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே இந்த வருடம் மட்டும் விஜய் நடிப்பில் ‘The Greatest of all Time’, ‘தளபதி 69’, ‘கில்லி’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த, தகவல் விஜய் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ‘ஆக்சனுக்கு தயாராகுங்கள்’ – வெளியானது ‘The Greatest of all Time’ செகண்ட் லுக்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here