அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு ரஷ்யா செல்லும் ‘Thug Life’ படக்குழு..!

0
83

‘Thug Life Update’ : சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே நேரத்தில் கையாண்டு வந்த உலக நாயகன் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என் ட்ரி கொடுத்தார். விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது.

கமலும், மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் படத்தை கொடுத்து பெரும் அடையாளமாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில், ‘தக் லைப்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவிலுள்ள சைபீரியா பகுதியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கமல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here