Kamal Haasan: மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்யப்போவதாக அறிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க முடியாமல் போனது.
முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்துவிட்டு இந்த மாதம் சைபீரியா செல்ல இருந்தார். ஆனால், தற்போது கமல் நடிக்கவிருந்த படப்பிடிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.