‘தலைவர் 171’ படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்..!

0
156

‘Thalaivar 171’: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லோகேஷ் யுனிவர்ஸில் இருந்து இந்த படம் சற்று மாறுபட்ட படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ‘தலைவர் 171’ படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதன்படி, ‘தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது.

இந்தப் படம் போதைப்பொருளை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பது உறுதியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் கேரியரில் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும்.

‘தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு எதிரான் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ‘தலைவர் 171’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மாஸ் லுக்கில் இருக்கும் ரஜினியின் கையில் தங்க வாட்ச்களுடன் கட்டப்பட்டு கைது செய்யப்பட்டது போல இருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து, இந்த ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ‘கழுகு’ என சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த நிலையில், ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க ஷாருக்கானை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அனுகியுள்ளார். ஆனால் அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் தற்போது ரன்வீர் சிங் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here