நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘லால் சலாம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், ‘லால் சலாம்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் ‘லால் சலாம்’ திரைப்படம் ஏழு திரையரங்குகளில் நேற்று காலை திரையிடப்பட்டது.
இதனால், ரஜினி ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அப்போது அங்கு வந்த ரசிகர்கள் கையில் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறத்தில் புதிதாக ஒரு கொடியுடன் வந்திருந்தனர்.
அந்த கொடியில், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா புகைப்படமும், ‘சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஏற்கனவே ஒரு கொடியை பயன்படுத்தி வரும் நிலையில் நேற்று புதிதாக ஒரு கொடியை ரசிகர்கள் எடுத்துச் சென்றது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘அரசியல் ஒரு துறை கிடையாது’ – விஷால்..!