Trisha: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றியத் தொடர்ந்து தற்போது தற்போது ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் உருவாகி வருகிறது.
இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு இயக்குநர் அட்லீ 60 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அட்லீக்கு இந்த சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அல்லு அர்ஜுனனின் 24 அல்லது 25ஆவது படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ இயக்கும் அல்லு அர்ஜூன் படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தொடர்ந்து, படத்திற்கான முன் பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருவதால் விரைவில் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.