அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் படம் ‘லவ்வர்’. இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படமானது கல்லூரியில் இருந்து ஆறுவருடங்களாகப் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்ணிற்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலை விவரித்துப் பேசுகிறது.
இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழிம் ‘லவ்வர்’ என்றும் தெங்கில் ‘ட்ரூ லவ்வர்’ என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘ட்ரூ லவ்வர்’ படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முன்னதாக மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
அந்த வகையில், தற்போது ‘லவ்வர்’ திரைப்படமும் வெளியாகி வெளிமாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.