அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கயல்.. நடந்தது என்ன?.. இன்ஸ்டா பதிவால் ஆடிப்போன ரசிகர்கள்..!

0
137

Actress Chaitra Reddy: சின்னத்திரையில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்ற நடிகை நடிகை சைத்ரா ரெட்டி. கன்னட சீரியலில் நடித்துவந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ தொடரின் மூலம் இவருக்கு மவுஸ் அதிகரித்துள்ளது. இந்த சீரியல் மூலம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இந்நிலையில், தற்போது சைத்ரா ரெட்டியின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் அவர், “நேற்று இரவு என்னக்கு ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது. இதனை எல்லாரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். எனது பணியை முடித்துவிட்டு நள்ளிரவு 1 மணியளவில் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருதேன்.

அப்போது போரூர் மேம்பாலத்தில் DD சோதனை நடைபெற்றதால் சாலையில் சென்ற கார்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தன. நானும் காரில் மெதுவாக சென்றபோது மேம்பாலத்தில் இருந்த ஒரு பெரிய சிமெண்ட் கலவை ஒன்று எனது காரின் மீது விழுந்தது.

திடீரென்று சிமெண்ட் கலவை வந்து விழுந்ததால் அதிர்ச்சியடைந்தேன். என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் நின்றேன். காருக்குள் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

காரின் மீது விழுந்த சிமெண்ட் கலவைகள் கெட்டியாக ஒட்டிக்கொண்டது. இதனால் கார் மிகவும் சேதமடைந்தது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. அங்கு ஒரு பதாகை கூட இல்லை.

இதே இந்த இடத்தில இருசக்கர வாகன ஓட்டுநர் சென்றுகொண்டிருந்தால் இந்த விபத்தால் நிச்சயம் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here