தவெக தலைவர் வாக்களித்தார்.. தொண்டர்கள் படை சூழ வாக்குச்சாவடி வந்த விஜய்..!

0
93

Actor Vijay: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

மேலும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர், அந்த வகையில், முதல் ஆளாக நடிகர் அஜித் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், கமல், தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், சசிகுமார், யோகி பாபு உள்ளிட்டோரும், நடிகைகள் திரிஷா, குஷ்பூ உள்ளிட்டோரும் தங்களது வாக்கினை செலுத்துவிட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் தற்போது சென்னை நீலாங்கரை புனித தோமையார்மலை ஊ.ஒ. பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வாக்களித்தார். அப்போது அவரது இடது கையில் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது தெரியவந்தது.

விஜய் வருகையை அறிந்த ரசிகர்கள் வாக்குச்சாவடியில் குவியத் தொடங்கினர். தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கிய விஜய்யை காவல் துறையினர் பாதுகாப்பாக வீட்டுவரை சென்று விட்டுச் சென்றனர். தற்போது இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here