‘வாழ்த்து கூறிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’ – தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்..!

0
97

‘TVK’ Leader Vijay: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயரை வெளியிட்டுள்ளார். இதற்கான அறிக்கையும் விஜய் வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், ரசிகர்களும் ஆதரவும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ‘தமிழக வெற்றி கழக’ தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள்,

பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்’ அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இறந்துவிட்டதாக பொய் தகவல் பரப்பிய பூனம் பாண்டே.. 5 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here