‘பாஜக ஆட்சியே மீண்டும் வரவேண்டும்’ – தவெக தலைவர் விஜய் அறிக்கை?..

0
107

TVK Vijay: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கங்கள் உள்ளன. மேலும், கட்சி சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்படும்.

ஆனால், தற்போது தவெக பெயரில் போலி அறிக்கையில் வெளியாகி வருகின்றன. இதில், ஆபாச படங்களுடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் லெட்டர் பேடு போன்று உருவாக்கி அதில் விஜய் அறிக்கை வெளியிட்டது போல புகைப்படங்கள் பரவி வருகின்றன.

மேலும் அதில், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் கூறியது போல போலி அறிக்கை பரவியது. தொடர்ந்து, மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் வரவேண்டும், அவர்களுக்கு வாக்களியுங்கள் எனவும் அறிக்கை பரவி வருகிறது.

இப்படி பரவி வரும் போலி அறிக்கையால் தவெக தலைவர் செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கிறார். மேலும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு, நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here