இது நியாயமா?.. TVK-வை அடமானம் வைத்த தம்பிகள்.. அண்ணனின் அடுத்த பிளான் என்ன?..

0
90

TVK Vijay: தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ’The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ‘தளபதி 69’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் தான் அவருடைய கடைசி படம் என கூறப்படுகிறது.

அந்த படத்தைத் தொடர்ந்து முழு அரசியல்வாதியாக மாறி தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியை பெரியளவில் உருவாக்க இருக்கிறார். தொடர்ந்து, உதவிகள் செய்து மக்கள் மனதில் இடம் பெற துடித்து வருகிறார்.

ஆனால், இதனை ஒரே அடியாக வீழ்த்துவதற்காகவே அவரது கட்சியில் சில கருப்பு ஆடுகள் திரிகின்றன. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் விஜய் உறுதியாக தெரிவித்துவிட்டார்.

ஆனால், அண்ணனுக்குத் தெரியாமல் தம்பிகள் சில சேட்டைகள் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வட மாவட்டங்களின் சில பகுதிகளில் மறைமுகமாக ஒரு கட்சிக்கு ஆதரவு தருவதாக தம்பி ஒருவர் கூறியிருக்கிறார்.

மேலும், அவருக்கு கீழ் இருக்கும் தொண்டர்களையும் அந்த கட்சிக்கு ஆதரவு கொடுக்குமாறு கூறி வருகிறார். இதன் மூலம் அந்த தம்பி நிறைய வருமானம் ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி கட்சியின் மூத்த தலைமைக்குத் தெரியவந்துள்ளது.

முன்னதாக இதேபோல் ஒருவர் வேறு கட்சிக்கு ஆதரவு கொடுத்த நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் மற்றொரு ஆடு சிக்கியுள்ளது. இந்த விவகாரத்தை எப்படி அனுகவுள்ளனர் என்பது தெரியவில்லை.

தொடர்ந்து நடிகர் விஜய் சினிமாவில் பிஸியாக இருப்பதால் தலைமைக்குத் தெரியாமல் தம்பிகள் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் விஜய் அரசியலில் கவணம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here