பான் இந்தியா அளவில் ரெடியாகும் ‛உடன்பிறப்பே’ இரண்டாம் பாகம்

0
120

Udanpirappe: இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சசிகுமாருடன், ஜோதிகா ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் ‛உடன்பிறப்பே’. இந்த படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணன், தங்கை செண்டிமெண்ட்டை வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் இயக்குநர் சரவணன் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், இந்த இரண்டாம் பாகத்திலும் ஜோதிகா நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஜோதிகாவிற்கு தற்போது ஹிந்தியிலும் மார்க்கெட் இருப்பதால், இந்த படத்தை பான் இந்தியா அளாவில் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here