‘கேப்டன் மில்லர்’ ஒரு அருமையான படைப்பு – உதயநிதி ஸ்டாலின் பாராட்டு..!

0
68

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் நேற்று (ஜன.12) உலகளவில் வெளியானது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின்னர் ரிலீஸ் ஆன ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும், படம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகை பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘Mission Chapter 1’ படத்திற்கு வாழ்த்து கூறி கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here