விரைவில் டாக்டர் பட்டம் பெறும் ராம்சரண்.. எந்த பல்கலைக்கழகத்தில் தெரியுமா?

0
185

Ram Charan: தெலுங்கில் முன்னனி நடிகர்களில் ஒருவர் ராம்சரண். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ராம்சரண், ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.

இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் தனது 16ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில், ராம்சரணுக்கு வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வரும் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த விழா பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் ராம்சரண் பங்கேற்கவுள்ளார்.

மேலும், அவருக்கு கலை சேவையை பாராட்டும் விதமாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த பட்டத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here