அதிரடியாக அரசியலில் குதித்த விஜயகுமார்..!

0
174

‘Actor Vijayakumar’: தமிழ் சினிமாவில் உறியடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகுமார். இந்த படம் சரிவர ரசிகர்களிடம் சென்றடையாத நிலையில் சில நாட்களுக்குப் பிறகே இந்த படத்திற்கான மவுஸ் எகிறியது.

அதன்பேரில் உறியடி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பில் உறியடி பாகம் இரண்டு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இனி படம் இயக்கபோவதில்லை எனவும் படங்கள் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறியிருந்தார்.

அதன்பேரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விஜயகுமார் நடிப்பில் ‘பைட் கிளப்’ படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில், தற்போது இயக்குநர் தமிழ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தை ‘ரீல் குட் பிலிம்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், தற்போது இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, விஜயகுமார் நடிக்கும் இந்த படத்திற்கு ‘எலெக்‌ஷன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் விஜயகுமார் வெள்ளை வேட்டியில் நடந்து வருவதுபோல் அமைந்துள்ளது.

இந்த படம் தலைப்பிற்கு ஏற்றார்போல் படம் முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக உருவாகி வருகிறது. தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ‘எலெக்‌ஷன்’ படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here