நாளை வெளியாகும் ‘உயிர் தமிழுக்கு’ பர்ஸ்ட் சிங்கிள்..!

0
132

Uyir Thamizhukku: மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரிக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்த படத்தில் இயக்குநரும் நடிகருமான அமீர் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சாந்தினி, ஆனந்த்தராஜ், ஶ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ் கபூர், மாரிமுத்து, சுப்ரமணியசிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ‘உயிர் தமிழுக்கு’ படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

மேலும், தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அசோக் சார்லஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த படத்திற்கான பாடல்களை பா.விஜய் எழுதியிருக்கிறார். படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா ஆகியோர் எழுதியுள்ளனர்.

முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டது.

அதன்படி, ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் டீசர் மார்ச்.29ஆம் தேதி வெளியானது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

‘உயிர் தமிழுக்கு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here