யூடியூப்பில் 7.6M பார்வையாளர்கள்: மிரட்டாலாக வெளியான ‘ரத்னம்’ முதல் பாடல்..!

0
91

Vaarai Rathnam: நடிகர் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வாரை ரத்தினம்’ பாடல் யூடியூப்பில் வெளியாகி இதுவரை 7.6 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34 ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். இந்த நிலையில் ‘ரத்னம்’ படத்தின் முதல் லிரிக்கல் பாடல் புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி வெளியானது.

இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 26ஆவது இடத்திலும், 7.6 மில்லியன் பார்வையாளர்களையும் கொண்டுள்ளது.

விவேகாவின் பாடல் வரிகளும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையும் இணைந்து மாஸாக இந்த பாடல் உருவாகியுள்ளது. மேலும், விஷாலின் கம்பீரமான தோற்றம் ரத்தம் தெறிக்கும் எடிட் என பாடல் பிரம்மாண்டமாக உருவாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க: லியோ படத்திற்கு தடை?.. லோகேஷ் கனகராஜ் மீது வழக்கு!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here