‘Vadakkupatti Ramasamy’: சந்தானம் குரலில் வெளியாகவுள்ள முதல் பாடல்..!

0
66

Vadakkupatti Ramasamy: தமிழ் சினிமா ரசிகர்களிடம் ‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

மேலும், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, படக்குழு தனது ‘X’ தளத்தில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கில் ‘Abarakko Dabarakko’ என்ற பாடல் நாளை (ஜன.21) வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், பாடல் உருவாகும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அதில், இந்த பாடலை சந்தானம் பாடுவது போல உள்ளது. இதன் மூலம் இந்த பாடலை நடிகர் சந்தானம் பாடியள்ளார் என்பது உறுதியாகியுள்ளார். தொடர்ந்து, சந்தானத்தின் குரலில் வெளியாகவுள்ள பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘Journey of Mission Chapter 1’: மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here