வேற லெவலில் ஹிட்டான ‘Abarakko Dabarakko’ பாடல்..! உற்சாகத்தில் Fire விடும் ரசிகர்கள்..!

0
83

‘Vadakkupatti Ramasamy’: தமிழில் ‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

‘Abarakko Dabarakko’ என தொடங்கும் இந்த பாடலை நடிகர் சந்தானம் தனது சொந்த குரலில் பாடியிருக்கிறார். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி மாஸ் ஹிட்டாகியுள்ளது.

யூடியூப்பில் இந்த பாடல் நேற்று பாடல் வெளியாகிய நிலையில் தற்போது வரை 5 லட்சம் பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்துள்ளனர். மேலும், சந்தானம் குரலில் இந்த பாடம் வேற லெவலில் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாளை ‘புளூ ஸ்டார்’ ஆடியோ லான்ச்.. படக்குழு அறிவிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here