மாஸாக வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் புதிய பாடல்..!

0
111

Vadakkupatti Ramasamy: தமிழ் சினிமா ரசிகர்களிடம் ‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.

மேலும், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘Abarakko Dabarakko’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை நடிகர் சந்தானம் பாடிய நிலையில் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.

இந்த நிலையில், தற்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் அடுத்த பாடலான ‘பரவுது’ என்ற பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஷான் ரோல்டன் இசையில் அந்தோணிதாசன் பாடியிருக்கிறார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here