‘சும்மா சில்லு சில்லுனு வருவோம்’ … ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
40

Vadakkupatti Ramasamy: தமிழ் சினிமா ரசிகர்களிடம் ‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘வடக்குப்பட்டி ராமசாம’ திரைப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. மேலும், இதனை நடிகர் சந்தானம், தனது ‘X’ தளத்தில் வெளியிட்டு, அதில், ‘சும்மா சில்லு சில்லுனு வருவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சூரி நடிக்கும் ‘கருடன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here