‘வடக்குப்பட்டி ராமசாமி’ இன்னும் 3 நாள்களில் திரையரங்குகளில்… வீடியோ புரோமோஷன் செய்த படக்குழு..!

0
88

Vadakkupatti Ramasamy: தமிழ் சினிமா ரசிகர்களிடம் ‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.

மேலும், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான ‘Abarakko Dabarakko’ என்ற பாடலும் ‘Paravudhu’ என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால், படக்குழு தீவிரமாக புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படம் குறித்து வீடியோவை நடிகர் சந்தானம் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் வரும் ஒரு காட்சியை பகிர்ந்து, இப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் இன்னும் மூன்று தினங்களே உள்ளன என மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here