ஓடிடியில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’..!

0
119

Vadakkupatti Ramasamy: தமிழ் சினிமா ரசிகர்களிடம் ‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்த திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடித்தனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்தது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்தார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்தார்.

மேலும், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆனது. 80ஸ் காலக்கட்டத்தை பின்னணியாக வைத்து காமெடியாக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து, படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் தற்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஓடிடியில் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை சந்தானம் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் அமேஷான் பிரைமில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு போல் ஓடிடி தளத்திற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here