‘சந்தானத்தின் வெற்றிப் பாதை புதிய உச்சத்தை எட்டும்’ – விநியோகஸ்தர் ராகுல்..!

0
63

தமிழ் சினிமா ரசிகர்களிடம் ‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால், படக்குழு தீவிரமாக புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

‘டிக்கிலோனா’ படம் மூலம் ஹிட் கொடுத்தனர். அந்த இணை இப்போது மற்றொரு தனித்துவமான பொழுதுபோக்கு படத்துடன் மீண்டும் வருகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குக் காரணம்.

உலகம் முழுவதும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் நாளை திரைக்கு வரவிருக்கும் நிலையில், 600 திரையரங்குகளில் படம் வெளியிடப்படும் என்று படத்தின் விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தப் படத்தின் மூலம் சந்தானத்தின் வெற்றிப் பாதை புதிய உச்சத்தை எட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் சந்தானம் ரசிகர்கள் ஆர்வமுடம் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here