நாளை வெளியாகவுள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ டிரைலர்: படக்குழு அறிவிப்பு!

0
126

#VadakkupattiRamasamy: தமிழ் சினிமா ரசிகர்களிடம் ‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் தற்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வீடியோ மூலம் வெளியிட்டு தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளது. படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது டிரைலரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: வெளியானது ‘புளூ ஸ்டார்’ படத்தின் டிரைலர்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here