‘Vanangaan’: நடிகர் அருண் விஜய் இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் , சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.
முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தத நிலையில் பல்வேறு காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த போஸ்டரில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலை மற்றும் மற்றொரு கையில் விநாயகர் சிலையை வைத்திருந்தார். இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அந்த போஸ்டர் குறித்து நடிகர் அருண் விஜய் விளக்கம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ‘வணங்கான்’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘வணங்கான்’ திரைப்படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னதாக வெளியான படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. டீசரை தொடர்ந்து படம் குறித்த புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.