கொலைகார கூட்டம்.. மகளை மீட்க போராடும் தாய்.. வரலட்சுமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
131

Varalakshmi Sarathkumar: அறிமுக இயக்குநர் அனில் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் ‘சபரி’. மேலும், இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராம், மதுநந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகிகளை முதன்மையாக வைத்து படங்கள் வெளிவரும் நிலையில் அதேபோல், கதாநாயகியை முதன்மை கதாபாத்திரமாக வைத்து இந்த ‘சபரி’ படம் உருவாகியுள்ளது. திரில்லர் கதைக்களம் கொண்ட இந்த படம் ரசிகர்களிடம் கவனம் பெரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

பெரிய கொடூர கொலைகார கூட்டத்திடம் இருந்து தனது மகளை தாய் எவ்வாறு காப்பாறினார் என்பது தான் படத்தின் கதையாக உள்ளது. இந்த படம் வருகிற மே 3ஆம் தேதி ரிலீஸாகவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here