‘Veerappan’s message to Rajinikanth’: ‘யார் கூடையும் சேர வேண்டாம்..’ ரஜினிக்கு அட்வைஸ் சொன்ன வீரப்பனின் அதிர்ச்சி வீடியோ!

0
122

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73ஆவது பிறந்த நாளை இன்று (டிச.12) கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக் கூறியும் வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ரஜினி குறித்து வீரப்பன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரப்பனின் வாழ்க்கையை விவரிக்கும் ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடர் ஒன்று வரும் டிச.14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரை ஜெயச்சந்திர ஹாஷ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரில் எழுத்தில் உருவாகியுள்ளது. இந்தத் தொடரை சரத் ஜோதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இத்தொடரில் வீரப்பன் எம்ஜிஆர் மற்றும் ரஜினி குறித்துப் பேசும் காட்சிகளை மட்டும் ஜீ5 தனது ‘X’ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், “எம்ஜிஆர் மிகவும் கஷ்டப்பட்டவர் அவரைப் போலப் பிள்ளைப் பிறப்பது கஷ்டம். ஆனால், எம்ஜிஆர் போல ரஜினிகாந்த் வருவார் என எனக்கு நன்றாக தெரியும். ரஜினி யாரையும் மதிக்கக்கூடியவர், தெய்வபக்தி உடையவர்” எனப் பேட்டியளிப்பது போல அமைந்திருக்கும் அந்த காட்சியில் வீரப்பன் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து, நேரடியாக ரஜியின் பெயரைக் கூறி ‘உனக்காக ஒன்று சொல்லுகிறேன்’ எனத் தனது பேச்சைத் தொடங்குகிறார். அதில், “யார் கூடவும் சேரவேண்டாம், யாருக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம், உன்னைப் பயன்படுத்த வேண்டும் உன்னை அமுக்க வேண்டும் எத்தனையோ முதலைகள் காத்துக்கொண்டிருக்கிறது ஏமாந்துவிடாதே” என அறிவுரை வழங்கியிருக்கிறார்.

இந்த வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு ஏதேனும் பதில் கூறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here