நடிகர் வைபவ் தற்போது ஷெரிஃப் இயக்கத்தில் ‘ரணம் அறம் தவறேல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவுடன் இணைந்து தான்யா ஹோப் மற்றும் நந்திதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அரோல் கொரெல்லி இசையமைக்கிறார். சமீபத்தில் ‘ரணம்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் ‘ரணம்’ படம் இன்று ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், தற்போது இயக்குநர் வெங்கட்பிரபு ரணம் படம் குறித்து பேசிய வீடியோ சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ‘நான் அறிமுகப்படுத்திய நடிகர் இன்று 25ஆவது படத்தில் நடித்திருக்கிறார். வைபவ் நடித்து வெளியான ‘ரணம்’ படத்திற்கு வாழ்த்துகள். அனைவரும் ஆதரவு கொடுங்கள், படக்குழுவிற்கு வாழ்த்துகள்’ என பேசியுள்ளார்.