வாடிவாசல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்.. அமீர் பிரச்சினை என்னாச்சு?.. பெருமூச்சு விட்ட சூர்யா ரசிகர்கள்..!

0
108

Actor Surya: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தை யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார். மேலும், உலகளவில் 38 மொழிகளில் ‘கங்குவா’ படம் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.

படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன.

இந்த நிலையில், கூடிய விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ என்னும் திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. ‘கங்குவா’ படத்திற்கு பிறகு சூர்யா, சுதா கொங்கரா படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வாடிவாசல் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக வெற்றிமாறன் அடிக்கடி லண்டன் சென்று வருவதாகவும் விடுதலை 2 படப்பிடிப்பை முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறம் ஒருபாதையிலும், நடிகர் சூர்யா ஒரு பாதையிலும் செல்லுவதால் ‘வாடிவாசல்’ படம் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரம் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கும் அமீருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சூர்யா, படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. மேலும், இதன் காரணமாக சூர்யாவுக்கு பதிலாக தனுஷ் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இதுகுறித்த அப்டேட்டை மறைமுகமாக கூறியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறனிடம் ‘வடசென்னை 2’ குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த வெற்றிமாறன், தற்போது தயாராகிவரும் ‘விடுதலை 2’ முடித்த பின்னர் அடுத்ததாக ‘வாடிவாசல்’ உள்ளது. அந்த படத்தையும் முடித்த பின்னர் தான் ‘விடுதலை 2’ படம் தயாராகும்” என கூறினார்.

இதனைக் கேட்ட ரசிகர்கள் வாடிவாசல் டிராப் என பரவியது வதந்தி என்பதை உறுதிபடுத்திக் கொண்டனர். இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தொடர்ந்து இந்த படம் குறித்த அப்டேட்டுகல் விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here