ஆந்திராவில் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு ஆரம்பம்!

0
159

‘Vettaiyan’: இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 170ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக ‘தலைவர் 170’ எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளன்று இப்படத்திற்கு ‘வேட்டையன்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இடையில் ஒரு சில வாரங்களாக இதன் படப்பிடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தது.

தற்போது வேட்டையன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள கடப்பா பகுதியில் இன்று தொடங்கியுள்ளது. இதில், பஹத் பாசில், ராணா டகுபதி இருவரும் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here