Vettaiyan Poster Making: ‘வேட்டையன்’ பட போஸ்டர் உருவாகும் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

0
136

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 170ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக ‘தலைவர் 170’ எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளன்று இப்படத்திற்கு ‘வேட்டையன்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ‘வேட்டையன்’ படக்குழு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன் தொடர்சியாக. படக்குழு ‘வேட்டையன்’ போஸ்டர் உருவாகிய வீடியோவை யூடியூப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் போஸ்டர் பெயிண்டிங் வீடியோவை பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: இன்று வெளியாகும் ‘சிங்கப்பூர் சலூன்’ முதல் பாடல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here