‘நான் உயிரோடு வருவேன் என்று நினைக்கவில்லை’ – ஷாலினியிடம் மனம் உருகிய அஜித்..!

0
76

Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகர் அஜித் அதிவேகமாக ஓட்டி வரும் கார் தலைகுப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காரி கவிழ்ந்தவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் பதற்றத்துடன் காரை நோக்கி ஓடிச் செல்கின்றனர். காரில் இருந்த அஜித் மற்றும் உடல் இருந்த நடிகர் இருவரும் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட அஜித் ரசிகர்கள், ‘எங்களது தா ஸ்கிரீனில் வந்தா மட்டும் போதும் நாங்கள் ரசிப்போம், இப்படி சாகசம் செய்யவேண்டிய அவசியமில்லை.

உடலை பார்த்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்’ என சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து வீடியோவை ஷாலினிக்கு அஜித் அனுப்பியுள்ளார்.

அதில், ‘இந்த விபத்திற்கு பிறகு நான் உயிருடன் இருப்பதை என்னாலையே நம்ப முடியவில்லை’ என கூறியுள்ளார். தொடர்ந்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here