‘VidaaMuyarchi First Look’: மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப் பூர்வமான தகவலை வெளியிட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘விடாமுயற்சி’ படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் மட்டும் வெளியான நிலையில் நீண்ட நாட்களாக வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிடவுள்ளது.