விடாமுயற்சி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..

0
128

Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

அதற்கு முன்பாகவே இந்த படம் ‘பொங்கல்’ தினத்தன்று ரிலீஸாகவுள்ளதாக ‘குட் பேட் அக்லி’ பட போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. இதனால், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க அஜித் கண்டிஷன் போட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ரசிகர்கள் பயங்கர உற்சாகத்தில் இருக்கின்றனர். இருந்தாலும், அஜித்தை சீக்கிரம் ஷூட்டிங்கிள் கலந்துகொண்டு படத்தை முடிக்க கோரி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here