பல கோடி ரூபாய்க்கு வியாபாரமான ‘விடாமுயற்சி’ படம்!..

0
68

VidaaMuyarchi: நடிகர் ‘அஜித்’ நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மங்காத்தா படத்துக்கு பின்னர் அஜித்துடன் அர்ஜுன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தற்போது குளிர்காலம் என்பதால் படக்குழுவினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனிர். இந்த நிலையில், தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

‘விடாமுயற்சி’ படத்தின் வியாபாரம் தற்போது மிகப்பெரிய அளவில் பல கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோ, டீசர் உள்ளிட்டவைகள் வெளியாகினால் தான் அந்த படத்திற்கான வியாபாரம் நடைபெறும்.

ஆனால், ‘விடாமுயற்சி’ படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராத நிலையில், படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனமும், ஓடிடி உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நடிகை ஜெயப்பிரதாவை தீவிரமாக தேடும் காவல் துறை..! ஏன் தெரியுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here